வேலணை.

வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சி இன்று (17.08.2015) காலை 11 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வேலணை பிரதேச செயலர் திருமதி சதீசன் மஞ்சுளாதேவி தலைமையில் ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், திருமதி இ.மோகனேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வாழ்வின் எழுச்சி மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு க.மகேஸ்வரன், அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச செயலக பிரதித்தி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தி.மீரா அவர்களும், வேலணை பிரதேச செயலக கணக்காளர் திரு இ.றமணன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலகத்தில் உள்ள உள்ளூர் உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர்கள் கலந்து தமது பொருட்களை விற்பனை செய்தனர்.
தொடர்ந்து நாளையும் தொடர்ந்து இவ் விற்பனைச் சந்தை இடம்பெறவுள்ளது.
DSC_0096DSC_0104DSC_0119DSC_0127

DSC_0119

DSC_0134